Sunday 3 July 2016

அழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு


http://3.bp.blogspot.com/-0EqrJo67Ypk/UYSNPKi7NqI/AAAAAAAAC9E/bpgmEIsqT7o/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg
























பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. 
அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம்.  
அதே போல் அருள் இல்லாதவர்கட்கு விண்ணுலகம் இல்லை என்பதே இதன் பொருள்.  
அருளும், பொருளும் ஒருங்கே கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி தான். 
 இரண்டையும் ஒரே நேரத்தில் அடைய வழி இருக்கிறதா? 
 ஆம்.  இருக்கிறது.  அது தான் நம் சொர்ண பைரவர் வழிபாடு ஆகும். 

பொதுவாக எல்லோரும் கடவுள் வழிபாடு செய்வார்கள்.  
ஆனால் அவர்களுக்கு வழிபாட்டின் பலன் வந்து சேருவது தாமதமாகும் அல்லது
 பலன் கிடைக்கமலேயே போய் விடும்.  இதற்கு காரணம் அசைவம் சாப்பிடுவது தான். 
 அசைவத்தை நிரந்தரமாக நிறுத்தாமல் வழிபாடு செய்வதன் பலன் கிடைக்காது. 
 வழிபாடு செய்வதற்கென்றே சில நியமங்கள் உள்ளன.  
மேலும் வழிபாட்டை துவக்கும் நாள், கிழமை, நேரம் ஆகியன மிகவும் முக்கியமானது. 

நாம் இங்கே பார்க்கப் போவது மிக மிக மிக சிறப்பான, எளிமையான, மிக மிக மிக 
சக்தி வாய்ந்த சொர்ண பைரவர் வழிபாடு ஆகும்.  அதாவது திருவாதிரை நாள் 
சொர்ண பைரவர் வழிபாடு ஆகும்.  பொதுவாக ஒருவர் வழிபாடு செய்ய உகந்த காலம்
 என்று பார்க்கும் போது அவரவர் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமை இவற்றில் வழிபாடு
 செய்யலாம். 

நம்மில் சிலருக்கு பிறந்த ஜாதகம் இருக்காது.  அவர்களின் நட்சத்திரம், திதி, கிழமை
 தெரியாது.  எனவே நாம் எல்லோருக்கும் பொதுவாக சொர்ண பைரவர் வழிபாடு நடத்த 
ஒரு அற்புதமான நாள் உண்டு.  அது தான் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் ஆகும். 
 திருவாதிரை நட்சத்திரம் நம் ஆதி சிவன் அண்ணாமலையார் அவதாரம் செய்த நட்சத்திரம்
 ஆகும்.

திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் நாம் செய்யும் தானம், செபம், வழிபாடு 
இவற்றிற்கு கோடி மடங்கு பலன் உண்டு.  அப்படியென்றால் பைரவர் வழிபாட்டை 
தேய்பிறை சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பரணி நட்சத்திரம், செவ்வாய் கிழமை,
 ராகு காலம் இவற்றில் செய்யக்கூடாதா?  கண்டிப்பாக செய்ய வேண்டும்.  இதில் 
மாற்று கருத்தே இல்லை.  ஆனால் இவற்றையும் விட சக்தி வாய்ந்த நாள் தான் 
திருவாதிரை நாள் ஆகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாதிரை திருநாளில் தேய்பிறை சஷ்டியோ அல்லது 
தேய்பிறை அஷ்டமியோ அல்லது செவ்வாய் கிழமையோ வந்தால் இன்னும் சிறப்பு தான்.
  சரி திருவாதிரை வரும் நாட்களை எப்படி கண்டு கொள்வது?  அதற்கான விளக்கம் 
நமது வலைப்பூவில் திருவாதிரை கிரிவல நாட்கள் தலைப்பில் ஒரு பதிவு வந்துள்ளது. 
 அதில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதனை பின்பற்றி 
வழிபாடு செய்ய வேண்டியது தான்.

வழிபாடு செய்ய நாம் முதலில் அசைவத்தை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.  அசைவத்தை 
நிரந்தரமாக நிறுத்திய பின்பே வழிபாடு செய்ய வேண்டும்.  அசைவத்தை நிறுத்தாமல்
 வழிபாடு செய்தால் நாய் வந்து கடிக்கும்.  சொர்ண பைரவரே அசைவத்தை நிறுத்த
 செய்வார்.   
வழிபாடு செய்யும் முறை பின்வருமாறு:-

முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சொர்ண பைரவர் சந்நிதியில் ஆரம்பிக்க வேண்டும்.  
அவ்வாறு இயலவில்லையெனில் சொர்ண பைரவர் படத்தினை அச்சிட்டு 
பூசையறையில் வைத்துக் கொள்ளவும் அல்லது தங்கள் வீட்டு பூசையறையின் தெற்கு 
பக்க சுவற்றில் சந்தனத்தால் சூலம் வரைந்து, சூலத்தையே பைரவராக பாவித்து 
இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவேண்டும். 

இவ்வாறு 9 திருவாதிரை நாட்கள் ராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.  
வழிபாடு செய்யும் போது சொர்ண பைரவர் அஷ்டகம்  33 முறை பாராயணம்
 செய்ய வேண்டும்.  சொர்ண பைரவர் அஷ்டகம் 33 முறை பாராயணம் செய்த 
பின்பு “ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ“ என்று 108 முறை செபம் செய்யவும். 
கடைசியாக சொர்ண பைரவர் போற்றி - 33 ஒரு முறை பாராயணம் 
செய்து முடிக்க வேண்டும்.  அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், 
பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட வேண்டும்.

தொடர்ச்சியாக 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய 
வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்ய இயலாவிடிலும் பரவாயில்லை.  
விட்டுவிட்டாவது 9 திருவாதிரை நாட்கள் சொர்ண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.  
இந்த வழிபாடு செய்யும் நாளில் விரதம் இருப்பதும் கன்றுடன் கூடிய பசுவிற்கு
 உணவளித்தலும் மிக்க சிறப்பு. இவ்வாறு விரதம் இருத்தலும் கன்றுடன் கூடிய பசுவிற்கு 
உணவளித்தால் பலன்கள் வெகு விரைவில் தேடிவரும்.  இவ்வாறு
 9 திருவாதிரை நாட்கள்சொர்ண பைரவர் வழிபாடு செய்தால்
 ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:-

  1. கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து போகும்
  2. சொர்ண பைரவரின் அருள் நிரந்தரமாக வந்து சேரும்
  3. எல்லா விதமான தோஷங்களும் நீங்கும்
  4. எல்லா கடன்களும் தீரும்
  5. குன்றாத செல்வம் வந்து சேரும்
  6. வராத கடன்களும் வசூல் ஆகும்
  7. தொழில் பெரிய வளர்ச்சியை அடையும்
  8. நியாயமான பதவி உயர்வுகள் வந்து சேரும்
  9. நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும்
  10. நியாயமான முறையில் பண வரவு உண்டாகும்
  11. வேலையில்லாதவர்கட்கு வேலை கிடைக்கும்
  12. மறைமுக எதிரிகள் விலகுவர்
  13. செய்வினை கோளாறுகள் நீங்கும்
  14. அனைத்து வித செல்வங்களும் உண்டாகும்
  15. மிகுந்த புண்ணியம் சேரும்
  16. அட்டமா சித்துக்களும் உண்டாகும்
  17. நிரந்தரமான மனநிம்மதி கிட்டும்
  18. பிறவியில்லா பெருநிலை உண்டாகும்
  19. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
  20. கணவன், மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்
  21. சாபங்கள் அனைத்தும் நீங்கும்
  22. எல்லா வித நோய்களும் தீரும்
  23. நல்ல மக்கட் பேறு உண்டாகும்
  24. அட்ட லட்சுமிகளின் வாசம் இல்லங்களில் உண்டாகும்
  25. லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு இணையான செல்வம் உண்டாகும்
  26. வீட்டில் கால்நடைகளின் விருத்தி உண்டாகும்
  27. விவசாயத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும்
  28. சித்தர்களின் அருள் கிட்டும்
  29. எல்லா பிரச்சனைகளும் தீரும்
  30. வழக்குகள் அனைத்தும் தீரும்
  31. தவறான பழக்கங்கள் நீங்கும்
  32. அனைத்து கிரகங்களும் நன்மையே செய்யும்
  33. அனைத்து யோகங்களும் உண்டாகும்

இதில் விடுபட்ட அனைத்துவித கோரிக்கைகளும் நிறைவேறும்.  வேண்டப்பட்ட
கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும்.

Friday 20 May 2016

வைகாசி விசாகம்

வைகாசி விசாகப் பெருவிழா :
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றே என்ற உண்மையின் தத்துவத்தை விளக்குதலே இந்நாளின் சிறப்பாகும்.
 ஆறுமுகன் அவதாரம் :
“அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்ம ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய" என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் கூறுகிறது. அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது. சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே" என்று அருணகிரியார் பாடுவார். மாசியில் சிவபிரான் மன்மதனை எரித்துப் பின்னர் உயிர்ப்பித்த காமதகனம் (ஹோலி, காமன் பண்டிகை). பின்னர் பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமியில் சிவ-பார்வதி திருக்கல்யாணம். வைகாசி விசாகத்தில் குமரன் உதயம். அழகாக, தொடர்ச்சியாக இந்த தெய்வத் திருவிழாக்கள் வருகின்றன. 
அறுபடை வீடுகளில் திருவிழா :
ஆறுபடைவீடுகளிலும் விசாகத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். இரண்டாம் படை வீடான கடலாடும் திருச்செந்தூரில் விசாகப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த விழாவாக கொண்டாடப்படும் ப‌த்து நா‌ட்களு‌ம், முருக‌ப் பெருமானு‌க்கு ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நடைபெறு‌ம். மாலை‌யி‌ல் ‌திரு‌‌வீ‌தி உலாவு‌ம் நடைபெறு‌ம். அத‌ன்படியே, முருக‌ப் பெருமா‌ன் மாலை‌யி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நட‌ந்த ‌பி‌ன்ன‌ர் வச‌ந்த ம‌ண்டப‌த்தை 11 முறை வல‌ம் வருவா‌ர். சுவா‌மி வச‌ந்த ம‌ண்டப‌த்தை சு‌ற்‌றி வல‌ம் வரு‌ம் போது ஒ‌வ்வொரு சு‌ற்றுக‌ளி‌ன் முறையே வேதபாராயண‌ம், தேவார‌ம், ‌திரு‌ப்புக‌ழ், ‌பிர‌ம்ம தாள‌ம், ‌ந‌த்‌தி ம‌த்தள‌ம், ச‌ங்கநாத‌ம், ‌பி‌ள்ளை‌த் த‌மி‌ழ், நாகசுர‌ம், ‌வே‌ல்வகு‌ப்பு, ‌வீர வா‌ள் வகு‌ப்பு, க‌ப்ப‌ல் பா‌ட்டு உ‌ள்‌ளி‌ட்ட பா‌ட‌ல்க‌ள் இசை‌க்க‌ப்படு‌ம். “துள்ளியோடும் மீன்களின் விளைடாட்டால் செந்தூரின் வயல்கள் அழிந்தன. அவன் கடம்பமலர் மாலையின் மயக்கும் வாசத்தால் பூங்கொடிபோன்ற பெண்கள் மனம் அழிந்தது. மயிலேறிவரும் அந்த மாவீரனின் வேல் பட்டு கடலும், மலையும், சூரனுமாய் வந்த அசுர சக்திகள் அழிந்தன. அவன் திருவடிகள் பட்டு பிரமன் என் தலைமேல் எழுதியிருந்த தலையெழுத்து அழிந்து விட்டது" என்று அருணகிரிநாதர் முருகனை வணங்கித் தான் உயர்வு பெற்றதைக் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday 30 March 2016

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமித் திதியாகும் .. மாலைவேளையில் சிவாலயம் சென்று பைரவரைத் தரிசிப்பது சாலச்சிறந்தது ..தங்களனைவருக்கும் தொழில் விருத்தி .. உத்தியோகத்தில் பதவி உயர்வு .. கடன்சுமை குறையவும் இல்லத்தில் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் நிலவிடவும் பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் .. 





ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே !
சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!

பைரவர் என்றாலே பயத்தை போக்குபவர் .. அடியார்களின்
பாபத்தையும் நீக்குபவர் என்று பொருள் .. அவருக்குத் தகுந்த
பூஜைகள் செய்தால் மட்டுமே நம்மை காப்பார் என்றில்லை ..
எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அவரை நினைத்தாலே போதும்
சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் ..

துன்பங்களும் .. துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப்பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும் .. அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு
ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுதமொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது ..
கடவுள்வழிபாடு செய்துவிட்டு அதற்காக பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார் ..

இத்தகைய சிறப்புவாய்ந்த அஷ்டமித் திதியில் நாமும் பைரவரைப் போற்றுவோம் ! எல்லா நலமும் பெறுவோமாக!
ஓம் பைரவாய நமஹ ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !