Thursday, 26 July 2012

விரதங்களின் விவரமும் சனிபகவான் பற்றிய தகவலும்!



விரதங்களின் விவரமும் சனிபகவான் பற்றிய தகவலும்!

விரதம், நோன்பு, கிழமை என்பன ஒரே பொருளுடையன. எல்லாச் சம யங்களிலும் விரதங்கள் கைக்  கொள்ளப் படுகின்றன. வெறெந் தச் சமயங்களையும் விட சைவ சமயத்தில் அனேகமான விரத அனுஸ்டானங்கள் இருக்கின் றன.
இந்த விரதங்களையெல்லாம் ஒருவர் கட்டாயம் கைக் கொள் ள வேண்டுமென்ற நியதியும் கிடையாது. அவரவர் பக்தி, பலம், வசதி, விருப்பம், பொருள், இடம், கா லம், பருவம் முதலியன நோக்கிமேற்கொள்ள வேண் டும்.
ரதங்களை எவரொருவர் நோர்க்கி ன்றார்களோ அத்தகையவர்கள் திட சித்த மின்றி பெயருக்கோ, புகழுக் கோ, மற்றவர் களின் கட்டாயத்தி ற்கா கவோ, மேற் கொ ள்ளக் கூடாது. அப்படிச் செய்வதால் தேக இழைப்பு மனச் சோர்வு, கடவுள் பேரில் வீண் பழி, நோய் முதலிய தீமை களைச் சம்பாதிப்பதற்கு ஏது வாகும். இதனை “இயலாதன செய் யேல்” என்ற மூதுரை மூலம் அறிந்து கொள்ள லாம்.
ரதமாவது மனம் பொறிகளின் வழிப்போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், அல்லது சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன் றினாலும் கடவுளை விதிப்படி பக்தியன்போடு மன அமைதியுடன் வழி படுதலாம். நோக்கம் இதி லே தெளிபாகத் தெரி கிறது. “நோன் பென்பதுவே கொன்று தின்னா மை” என்பது நீதி வாக்கியம்.
சைவ சமயத்தின் முதல் விரதம் இதுதான் இவ் விரதம் ஒன்றையே கடைப் பிடித்தாலும் போ தும். “கொல்லான் புலாலை மறுத்தா  னைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும்” இது பொய்யா மொழிப் புலவரின் மெய் ஞானக் கருத்து.
யாதாயினும் பயன் கருதி விரதம் கடைப் பிடிப் பதைக் காமியம் என்றும், பயன் கரு தாது நேர்ப் பதை நிஷ்காமியம் என்றும் கூறப்படும். எவர் எப்படி கருத் துடன் அனுட்டித்தாலும் இறைவனா னவன் சுமந்தார்களுக்கு சுமைக் குத்தக்கபடி தக்க கூலி கொடுக்காமலே விட மாட்டான் இதுவே உண்மை.
விரதங்களை அனுஷ்டிப்பதால் தேகசுத்தி, நோயின்மை, தீர்க்காயுள், மனத் தூய்மை பாவ நீக்கம், நினைத்த காரிய சித்தி, மன அமைதி, மகிழ்ச்சி, இறை பக்தி ஆகிய எண்ணிறைந்த நன்மைகள் உண்டாகுமென சைவ சமய சிந்தாமணி மூலம் அறிய முடிகிறது.
இனி விரத வகைகளில் பல விதமான விரதங்கள் இருப்பதை சைவம் கூறுகி ன்றது. அந்த வகையில் சிவ, சக்தி, விநா யகர், முருகன், வீரபத்திரர், வைரவர், விஷ்ணு, பிதுரர் விரத ங்களுடன் நவக்கி ரகங்களை குறிப்பிடும் விர தங்களும் சிறப்பாக சொல்லப்படுகின்றது.
தற்போது புரட்டாதி மாதம் இந்த மாத்தில் புரட்டாதி சனிக்கிரக விரதமும், நவராத்திரி விரதமும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை. விகிர்தி வருடத்தில் தற்போது இடம்பெறும் சனிக்கிழமை விரதம் ஐந்து சனி தினத்தில் இடம் பெறவுள்ளது.
அவற்றுள் முதலாம் வார சனிக்கிழமை விர தம் 18-09 இல் முடிவற்றதை சைவ மக்கள் அறிந்திருப்பார்கள். இன்னும் நான்கு சனி விரத நாட்கள் இருக்கின்ற கா லத்தில் சனிக் கிரக மகிமை பற்றியும் விர தம் பற்றியும் சிறிது ஆராய்வது பொரு த்தமென்று நினை க்கின்றேன். முதலில் சனி பகவானைத் தெரி ந்து கொள்வோம்.
சனி பகவான் எனவும், சனீஸ்வரன் எனவும் சக லரும் போற்றும் “சனி நவக் கிரக பீடத்தில் அமர்ந்து எல்லோருக்கும் அச்சம் அளிப்பவர் ஆவார். எனினும் அவர் அரு ளின்றி வாழ்வில் இன்பங்களை அனுபவிக்க முடியாது என்பது பிரத்தியட்சம். சனி கொடுத்தால் எவர் தடுப்பார்? அத்தகைய விசேட பவர் படைத்தவர்தான் சனி பகவான்.
நமது பூர்வ புண்ணிய பயனாய் நம்மைதகி க்கும் நீதி தேவர் சனீஸ்வரன், நேர்மையின் வடிவம் அவர். வறுமையிலும் நேர்மை ஏழ் மையிலும் பக்தி வாழ்வு தாழ்வுற்ற போதி லும் மனநிலை சாய்ந்துவிடாத போக்கு ஆகியவை வாய்க்கப் பெற்று அவரைச் சரணடைந்து பக்தி செய்பவ ர்களுக்கு அவ ரொரு கற்பக விருட்சம். காலச் சக்கரத்தை பிளப்பதில் கதிரவனுக்குச் சமமான வர். மகா வல்லமை மிக்கவர் சனீஸ்வரர்.
நவக்கிரகங்களில் தலைமைக் கிரகமான சூரிய பகவான் “த்ரிஷ்டா” என்பவரின் மகளான சுவர்க் சலா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். வைவஸ்தமனு, எமதர்மன், என்ற இரண்டு மகன்களும், யமுனை என்ற மகளும் உண்டு. யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகளாவர்.
சூரியனின் இன்ப வாழ்வில் திளைத்த சுவர்ச்சலா தேவிக்கு நாட்கள் செல்லச் செல்ல ஆதவனின் வெப் பந்தாங்க முடியாமல் தகித்தார்.
இதனை தனது கணவனான பகலவ னிடம் சொல்ல முடியாமல் கானகம் செ ன்று கடும் வெப்பத்தை தாங்கும் சக்தி யை வேண்டி கடுந்தவம் புரிய ஆயத்த மானாள். அதற்கு முன்பு தன் மனோ வலிமையினாலும், சக்தியினாலும் தனது நிழலையே தன்னைப் போன்ற வடிவமாக மாற்றினாள்.
அந்த உருவம் தனது சாயலைப் பெற்றுள் ளமையால் “சாயா தேவி” என்று பெயர் சூட் டினாள். சாயா தேவிக்கும் ஞாயிறு என்கின்ற கதிரவனுக்கும் தபதி என்ற மகளும் “ச்ருத ஸ்ரவசி” ஸ்ருதகர்மா என்ற இரு மகன்களும் பிறந்தனர் இதில் “ஸ்ருத கர்மா” என்பவர் தான் சனிக்கிரகம் சனிபகவான், சனீஸ்வரன் என்றெல்லாம் போற்றப்படும் காகத்தை வாக னமாகக் கொண்ட தம்பிரான் ஆவார்.
மேற்குத் திசைப் பக்கம் அவரது ஆசன அமர் வாகும் சர்வ வல்லமை படைத்த சனி விநா யகப் பெருமானின் தலை துண்டுபடவும் பின் பு யானைத் தலை அமையவும் காரணமானவர். சுந்தர கணேசன், லம்போதர கணபதி ஆனதும் சனி பார்வையினாலேயே. மூல முதற்பொருளான மூத்த கணேசனின் சாபத்தினாலேயே சனி ஊன பாதன் ஆனதும் புராண கதைகள் மூலமும் அறியப்பட்டது.
நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது. சனி பகவான் காசித்திருத்தலம் சென்று சிவலிங்கமொன்றை பிரதிஸ்டை செய்து பூஜித்தார்.
அதன் பயனாக பரமேஸ்வரன் சனிபகவானின் பக்தியை மெச்சி சனி என்ற நீ இனி சனீஸ்வரன் என அழைக்கப்படுவாய் என்றும் நீ பூஜித்த லிங்கம் சனீஸ் வரலிங்கம் என திருநாமம் பெறும் என்று அருளியதாக வரலாறுண்டு.
சனி பகவானைப் பற்றி அனேகமான கதைகள் உண்டு. இருப்பினும் அவரது பிறப்பு பற்றியே இக்கட்டுரையில் குறிப்பிட்டேன். இனி சோதிடத்தில் சனிக் கிரகத்தின் ஒரு சில தகவல்களை ஆராய்வோம்.
ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2 1/2 வருட வீதம் 3×2 1/2 என சஞ்சரிக்கும் காலம் 7 1/2 சனி காலமாகும்.
இவர் ஒருவரின் ராசிக்கு 4 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.
குறிப்பிட்ட இந்த ராசி வீடுகளில் சனி சஞ்சாரம் இடம் பெறும் பொழுது இது சம்பந்தப்பட்டவர்களுக்கு யோக மான நற்பல ன்கள் இடம்பெற முடியாமற் போகின்றது. இதனை அனுபவ ரீதியாக அனுபவித்தவர் கள்தான் அறிவார்கள்.
ஒருவரது ராசிக்கு 3, 6, 11 ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை கூட்டி வழங்குவார் என சோதிட மூலம் அறியக் கூடியதாயுள்ளது.
இப்பேர்ப்பட்ட சனிபகவான் இந்தியாவி லும், இலங்கையிலும் உள்ள சைவ ஆல யங்களில் நவக்கிரக கோயில்களில் வழிபாட்டிற்காக வைத்திருப்பதை அறிய லாம். ஆனாலும் இந்தியாவில் திரு நள்ளாற்றில் தனி ஆலயமாக மிகப் பிரசித்தம் பெற்று விளங் குகின்றார். இல ங்கையில் திருக்கோணமலையில் மரத் தடியில் சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு பூசை வழிபாடும் புரட்டாதி மாதத்தில் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறுவதைக்காண முடியும்.
சனிக்கிரக மண்டலமானது பூமியை விட்டு அதிக தொலைவில் உள் ளது.
அதாவது 97 கோடியே 90 இலட்சம் மைல்கள் தூரம் எனவும் இதனைச் சுற்றி 3 வளையங்கள் உள்ளனவெ னவும் இதன் நடுவில் இருள் பட லம் இருப்ப தாகவும் 75000 மைல் 1/2 விட்டமுள்ளது எனவும் 700 பங்கு கன பரிமாணம் உள்ளது பூமியைப்போல் 100 மடங்கு எடையுள்ளது என வும் இது ராசி மண்டலத்தைச் சுற்றிவர 29 1/2 வருடம் ஆகிறது என வான வியல் உண்மைகள் புலப்படுத்துகின் றது.
மேலும் சைவ அடியார்களின் அறிதலு க்காக சனிபகவானின் அதி தேவதை யம தர்மன், வாகனம், காகம், திசை மேற்கு வஸ்திரம் கறுப்பு/கருநீலம், உகந்த புஷ் பம் நீலக்காக்கணை, தானியம் கறுப்பு எள்ளு நல்லெ ண்ணெய், எள்ளுக்கலந்த சாதம் அகியனவும் குறிப்பிடப்பட்டு ள்ளது.
அன்பர்களே சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை மங்களம் பொங்க வரமருள பிரதி சனிக்கிழமைகளில் விசே டமாக புரட்டாதி மாதம் வரும் சனிக் கிழமை களில் ஆசார சீலராக விரதமி ருந்து சங்கல் ப்பபூர்வமாக எள்ளு எரித்து சனி பக வானின் கெடுபலனிருந்து விடுபடுவதால் நற்பயனை பெறலாம் என ஆதார பூர்வமாக அறிய முடிகிறது.
கன்னிராசி வீட்டில் சனி பகவான் எதிர்வரும் 2011.11.14 ஆம் திகதி வரை சஞ்சரியப்பார்.
இக்காலம் வரை சனீஸ்வரரின் தாக்கத்திற்கு உள் ளாகும் நபர்கள் சனீஸ்வரரின் ப்ரீதியை வேண்டி அவ ருக்குகந்த புரட்டாதிச் சனி விரதத்தினை முறைப்படி அனுசரிப்பது அனுகூலமானதாகும். மேலும் சங்கடம் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா! என மனம் உருகி வேண்டுதல் செய்வதன் மூலமும்.
காகத் வஜாய வித்மகே
கட்க கஸ்தாய தீமஹி – தன்னோ
மந்த ப்ர சோதயாத் என்ற காயத்ரி மந் திரத்தை உச்சரித்து வழிபடுதல் மூல மும் சனிக்கிழமை அனுகூலத்தை பெற முடியும்.
மேலும் விசேடமாக சனீஸ்வரனின் கிருபா கடாட்சத்தை பெறுவதற்காக அவரது கவசம் ஒன்றி னை இங்கே தருகின்றேன்.
ஓம் அஸ்ய ஸ்ரீ சனைச்வர கவச
மஹா மந்தரஸ்ய – காஸ்யப ரிஷி
அனுஸ்டுப் சந்த சனைச்சரோ தேவதா
சம் பீஜம் நம் சக்தி மம கீலகம்
மம சனைச்சர கிரஹப்ரசாத
ஸித்தியர்த்தே ஜபே விநியோக!
இதனை தினசரி ஒருமுறை தியானிப்பின் சனி பகவானால் ஏற் பட்ட சங்கடம் விலகி மங்களம் உண்டாகுமாம். என சனி பகவானை ப் பற்றிய விபரங்கள் அடங்கிய பல நூல்கள் மூலம் அறிய முடி கின்றது.
முக்கியமாக சனீஸ்வரரின் ப்ரிதியை வேண்டி வழிபடுமடியார்கள் அவசியம் ஸ்ரீ கிருஷ்ன பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வதே உகந்தது.

No comments:

Post a Comment