Tuesday, 2 December 2014

Thiruvannamalai Periya Deepam ‘அண்ணாமலையார் தீபம்’

திருக்கார்த்திகை திருநாள் ஒருநாள் அல்ல, ஐந்து நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
பரணி தீபம்: முதல்நாள் பரணி தீபம் எனப்படும். பரணி காளிக்கு உரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள்.
அண்ணாமலையார் தீபம்: கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும். இதை, ‘அண்ணாமலையார் தீபம்’ என்று அழைக்கின்றனர்.
விஷ்ணு தீபம்: 3வது நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை விஷ்ணு தீபம் என அழைப்பர். இது, விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.
நாட்டுக் கார்த்திகை: 4வது நாள் மிருகசீரிட நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது நாட்டுக் கார்த்திகையாகும். பெண்ணையும் மருமகனையும் வீட்டுக்கு அழைத்து வந்து சிறப்புகள் செய்து விருந்து வைப்பர். இந்நாளில் குலதெய்வங்கள் வீட்டுக்கு வந்து அருள்புரிவதாக நம்பிக்கை.
தோட்டக் கார்த்திகை: 5ம் நாள் திருவாதிரை தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது, தோட்டக் கார்த்திகையாகும். வயல்கள், தோட்டங்கள், கிணற்றடிகளில் தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர். இது, கிராமங்களில் உள்ள பலவகை தெய்வங்களுக்கான வழிபாடா

No comments:

Post a Comment