Wednesday 27 May 2015

இறைவனின் வாசனை எப்படி இருக்கும்


    எவருடய உள்ளத்திலும் வந்து அமருவான் இறைவன்.
    இவன் தன்மை யாதெனில், இவனுக்கு எதுவும் சொந்தமில்லை, யார் தம்மை அழைத்தாலும்... பாரபட்சமின்றி வந்தமருவான்.
    ஏழை பணக்காரன் எல்லாம் இவனுக்கு ஒன்றுதான், .
    எதுவும் இவனுக்கு பெரிய விஷயமில்லை.
    யாவரும் தம் பிள்ளைகளே எந்த ஒரு விருப்பு, வெறுப்பும் கிடையாது.
    இவன் வந்தால், என்னே ஒரு மகிழ்ச்சிகொள்கிறது இந்த மனம்.
    இவனை பற்றி அறிய முற்படும்போதே ஒரு அமைதி சூழ்ந்து கொள்கிறது.
    எங்கோ மழை அடித்தால் இங்கே வரும் குளிர்காற்று போல, இவன் நறுமணம்,
    இவன் தன்மையை, இவனை அறிய முற்படும்போதே, மனம் மெல்ல மெல்ல உணர ஆரம்பிக்கிறது.
    எந்த ஒரு நிகழ்வையும் இவன் நேர்படுத்துவான்,
    எந்த ஒரு இடரையும் சரிசெய்வான்.
    எப்படிப்பட்ட மனதையும் அது எப்படிப்பட்ட தன்மையாயினும் அதனை நொடிபொழுதில் சரி செய்துவிடுவான்.
    இவன் அற்புதம் உள்ளே நன்றாக ஆழ்ந்து உள்வாங்க உள்வாங்க, கல்நெஞ்சமும் கரைந்து, நெகிழ்ந்துவிடும்.
    இவன் இருக்கும் இடத்தை சுற்றி எங்கெங்கும் அன்பின் அலைகள் கரைபுரண்டோடும், மெல்லிய அமைதி உறைந்துகிடக்கும்.
    யாரெல்லாம் இந்த அலைவட்டத்திற்குள் தம்மை இணைத்துக்கொள்கிறார்களோ
    அவர்களுக்கெல்லாம் அள்ள அள்ள குறையாத அன்பின் அலைகளும், தெவிட்டாத ஆனந்தமும்,
    அமைதியும், தெளிவும் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை 

No comments:

Post a Comment