Wednesday, 23 August 2017

SRI SUBRAMANYA BHUJANGAM BY ATHI SANKARAR



ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் தமிழில் 

பால முகத்தேனும் வினைமலை பொடிக்கும்
வேழ முகத்தேனும் சிங்கங்கள் துதிக்கும்
இந்திரன் முதலோர் போற்றும் கணநாதா
புந்தியில் வைத்தேன் மங்களம் அருள்வாய்.

ஓதலும் அறியேன் பொருளும் அறியேன்
பாடலும் அறியேன் உரைகளும் அறியேன்
அகத்தினில் ஓரொளி அறுமுகத்தே உதிக்க
வாக்கினில் சுரந்தது பாக்களின் அருவி.  
             
மயிலேறும் மன்னன் மகாதத்வ வண்ணன்
மனம்நாடும் வடிவோன் மாதவத்தார் உயிரோன்
அந்தணர் அரும்புகழ் அருமறை திருப்பொருள்
ஆண்டவன் புதல்வ அகிலத்து முதல்வ.                ௩

என்னுடை சந்நிதி வந்தவர் எவரும்
தன்னுடை பவக்கடல் கடந்தவ ராவர்
என்றே உரைத்து செந்தூர் கரையில்
நன்றே நிற்கும் சக்தியின் மைந்த.           

அலைகள் விழுந்து அழிவது போலாம்
தலைகள் வணங்கின் பாவம் அழியும்
கடலைச் சுட்டும் குகையின் கனலென்
இதயத் தாமரை இருத்தி வாழிய.                        ௫

கந்தன் ஏறிய கந்தமா மலையில்
வந்து ஏறியே வணங்கும் பக்தன்
கைலாச மேறிய புண்ணியம் பெறுவான்
கனிவாய் கூறிய ஆறுமுகம் வாழிய. 

பெருங்கடல் கரையில் பெரும்பவம் அழிக்கும்
பெருமுனி நோற்கும் பெருமண மலையில்
குகையுள் வசிக்கும் தன்னொளி வசந்தன்
குறைகள் நசிக்கும் குகனே போற்றி.                     ௭

பொன்வீடு வசித்து முறையீடு தீர்த்து
மணம்வீசு மலர்நிறை மாணிக்க மஞ்சத்து
ஆயிரம் ஞாயிற்று அருளொளி வீசும்
அறுவர் வளர்த்த அமரேச போற்றி
அன்னம் சூழ்ந்து செந்நிறம் பூண்டு
அகத்தை அள்ளும் அடிமலர் அழக
வாழ்கடல் வாதனை என்மன வண்டு
சூழ்ந்துநின் மலரடி மொய்ப்பதில் மகிழ்க.              ௯

பொன்னால் புனைந்த ஆடைகள் தரித்து
கிங்கிங் கிணிகிணி சலங்கை இசைக்க
உண்மை வாய்ந்த ஞானியர் போற்றும்
திண்மை இடையோன் கந்தா வாழிய.  
வேடுவர் பெண்ணை சேர்த்து அணைத்து
மடுவில் பூசிய சாந்து சுமந்த
செம்மார் வேலா தாரகன் காலா
அன்பர் ஆசை தீர்க்கும் நேசா.                           ௧௧

துதிக்கா பிரும்மனை சிறையில் அடைத்தாய்
துதிக்கை விலங்கின் திமிரைத் துடைத்தாய்
மதிக்கா பதுமன் அரக்கர் புடைத்தாய்
மதித்தே துதித்தேன் பதினிரு புயத்தாய்.                ௧௨
கறைநறு திலகக் கதிரறு முகத்து
குறையொரு நிலவு ஒப்பில எண்ணில்
கறையறு முகத்து உவமை கூறிட
அறுமதி இலவே குறைமதி உளதே.                     ௧௩

நின்முக முறுவல் மலருறு அன்னம்
நின்கடைப் பார்வை மலர்மொய் வண்டு
நின்இதழ் உமிழ்நீர் மலர்பொழி அமுதம்
நின்அறு முகமும் தாமரை மலரே. 
விரிந்து அகன்று செவிவரை நீண்டு
சுரக்கும் கருணை பன்னிரு கண்ணா
அதனுள் ஒருகண் கடைநோக்குப் பார்வை
என்மீது படர குறையென நினக்கு?                     ௧௫

‘அங்கம் உதித்த அருமைப் புதல்வ’
பொங்கும் உவகையில் அரனார் அணைத்து
உலகின் முதல்வன் உச்சி முகர்ந்த
உன்னறு சென்னிக்கு என்னுடை வணக்கம்
மார்பில் ரத்தின மாலை ஒளிரும்
காதணி அசைவால் கன்னமும் ஒளிரும்
மஞ்சள் உடுத்தி மயக்கும் வேலொடு
என்புறத்தில்  என்றும் சிவக்குமரன் தங்குக.            ௧௭

சக்தியின் மடியில் அமர்ந்திடு போதினில்
சங்கரர் அன்புடன் கரத்தை நீட்டிட
தாவியே பாய்ந்து தழுவியே மகிழும்
குழந்தைக் கடவுள் குமரா போற்றி.    
குமரா மைந்தா குகனே கந்தா
தலைவா வேலா மயில் வாகனனே
புலிந்தன் மருகா துயர்துடைப் போனே
தாரகன் காலா காப்பாய் என்னை.                      ௧௯

பொறிகள் தளர்ந்து உணர்வும் அகன்று
பீழை பொழிந்து பயத்தால் நடுங்கி
புறப்படு நிலையில் சடுதியில் தோன்றி
குகனே தயாளா காப்பாய் என்னை. 
காலன் தூதுவர் கடிந்தெனை அதட்டி
கட்டியும் வெட்டியும் துயர்தரு வேளையில்
கருணை மயிலில் விரைந்தே வந்து
கரத்தில் வேலொடு காப்பாய் என்னை.                ௨௧

உன்னடி கிடந்தது உன்னைத் துதித்து
உன்னால் மகிழும் அடியேன் நானும்
அந்திமக் காலை அசைவற்ற வேளை
அலட்சிய மின்றிக் காப்பாய் என்னை.   
அண்டம் ஆயிரம் ஆண்ட சூரனும்
தாரகன் வக்தரன் சிங்கனும் கொன்றாய்
வான்மன மேகமோகம் வதைப்பாய் இல்லை
செய்வதும் என்ன? செல்வதும் எங்கு?                 ௨௩

அடியேன் என்றும் துக்கச் சுமையோன்
அன்பர் காக்கும் உனையின்றி நாடேன்
துன்பம் கொடுக்கும் உன்னன்பு கெடுக்கும்
மனநோய் களைவாய் சக்தியின் மைந்தா.  
குஷ்டம் க்ஷயமும் வலிப்பு ஜுரமும்
கடுப்பு பைத்யம் பலவித நோய்களும்
பைசாச கணங்களும் பயந்தோ டும்மே
பன்னீர் இலையில் உன்நீறு பார்த்திட.                 ௨௫

கந்தனைக் கண்டு கந்தனைக் கேட்டு
கந்தன் புகழை நாவால் ஓதி
கந்தன் திருவடி கரத்தால் துதித்து
எந்தன் அங்கம் உனக்காய் இருக்க.       
முனிவர்  தேவர் பக்தர் விருப்பமே
முடிக்கும் தெய்வம் எல்லா விடத்தும்
கடையனைக் கூடக்கடைத் தேற்றும் தெய்வம்
கந்தனை யன்றி அறியேன் அறியேன்.                  ௨௭

மனைவி மக்கள் சுற்றமும் நட்பும்
மற்ற ஆணும் பெண்ணும் அனைவரும்
உன்னைப் போற்றிட வணங்கிட துதித்திட
நினைப்பவர் ஆகிட அருள்வாய் குமரா.   
கெடுசெய் மிருகம் புள்ளினம் மற்றும்
கொடுமை நோய்கள் புன்மைகள் வந்தால்
கைவேல் கொண்டு உடனே துரத்திடு
கிரௌஞ்சம் துளைத்த கூர்வடி வேலா.                ௨௯

தாயும் தந்தையும் தன்சேய் பொறுப்பர்
நீயும் அதுகொள் தேவசேனைத் தலைவா
நானொரு குழந்தை நீயுலகின் தகப்பன்
என்பிழை பொறுத்து அருள்வாய் ஈசா
மயிலும் போற்றி வேலும் போற்றி
கடாவும் போற்றி சேவலும் போற்றி
கடலும் போற்றி செந்தூர் போற்றி
மீண்டும் போற்றி கந்தப் பெருமானே.                   ௩௧

ஆனந்தன் வாழ்க அருளோன் வாழ்க
புகழோன் வாழ்க வடிவோன் வாழ்க
கடலோன் வாழ்க உறவோன் வாழ்க
முக்திதரு முதல்வன் மைந்தா வாழ்க
புஜங்கம் என்னும் தோத்திரம் இதனை
பக்தியால் படித்தோர் பயனாய் பெறுவர்
நற்றுணை மக்கள் பொருளும் வாழ்வும்
முருகன் அருளால் முக்தியும் முடிவில்.

                                      நன்றி 
                                    ஆனந்த பத்மநாபன் 
  • ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
    மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
    விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே
    விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி - 1

    ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
    ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
    சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
    முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் - 2

    மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
    மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்
    மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
    மஹாதேவ பாலம் பஜே லோகபா லம் - 3

    யதா ஸந்நிதானம் கதாமானவா மே
    பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
    இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
    தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் - 4

    யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
    ததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே
    இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
    ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் - 5

    கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
    ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா
    இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா
    ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து - 6

    மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
    முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே
    குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
    ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் - 7

    லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
    ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
    ஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
    ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் - 8

    ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
    மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
    மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
    ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே - 9

    ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
    க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
    லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
    கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் - 10.

    புளிந்தேச கன்யாக நாபோக துங்க
    ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம்
    நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர
    ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் - 11

    விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
    நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான்
    ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண செளண்டான்
    ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் - 12

    ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
    ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
    ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
    ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் - 13

    ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்
    கடாக்ஷரவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
    ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ
    தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி - 14

    விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
    தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு
    மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
    பவேத்தே தயாசீல கா நாமஹானி - 15

    ஸுதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
    ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
    ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய
    கிர£டோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய - 16

    ஸ்புரத்ரத் ன கேயூரஹாராபிராம ..
    ஸ்சலத் குண்டல ச்ரூலஸத் கண்டபாக
    கடெள பீதவாஸா கரே சாருசக்தி
    புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ - 17

    இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
    ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
    ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
    ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் - 18

    குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
    பதே சக்தி பாணே மயூரா திரூட
    புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
    ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் - 19

    ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
    கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
    ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
    த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் - 20

    க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபா
    த்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
    மயூரம் ஸமாருஹ்ய மா¨பரிதி த்வம்
    புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் - 21

    ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
    ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
    நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
    நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷர - 22

    ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
    ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய
    மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்
    ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி - 23

    அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
    பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே
    பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
    மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் - 24

    அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
    ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
    பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
    விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே - 25

    த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி
    முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
    கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
    குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா - 26

    முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
    மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
    ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
    குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே - 27

    களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா
    நரோவாத நாரீக்ருஹே யே மதீயா
    யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
    ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார - 28

    ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா
    ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
    பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸுதூரே
    விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல - 29

    ஜநித்ரீபிதாச ஸ்வபுத்ரா பராதம்
    ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத
    அஹம் சாதிபாலோ பவான் லோக தாத
    க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச - 30

    நம கேகினே சக்தயே சாபி துப்யம்
    நமச்சாக துப்யம் நம குக்குடாய
    நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
    புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து - 31

    ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
    ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
    ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
    ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ - 32

    புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
    படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
    ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
    லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ. - 33

No comments:

Post a Comment