Wednesday 24 September 2014

LALITHA -KAMESWARI SHOBANAM *- NAVARATHIRI SPECIAL


இந்த நவராத்திரி பண்டிகையில் எல்லோரும் நோயின்றி சுகமாக
இருக்க வேண்டும் என்று லலிதா - காமேஸ்வரி தம்பதிகளைப்
பிரார்த்தித்துக்கொள்வோம்.
லலிதாம்பாள் சோபனம்-சில வரிகள்:-
மங்களமுண்டாகப் பாடுகிறோம்
“ஆதிப் பிரம்மரிஷி அகஸ்தியரும்
அகிலலோகம் சஞ்சரிப்பவரும்
ஜோதி காமாக்ஷியைக் காஞ்சி நகரத்தில் ஸ்துதித்து பூஜை செய்து தபஸிருந்தார்.
சங்கு சக்கரம் வலக்கை புஸ்தகமும்
தரித்தே ஹயக்ரீவர் மஹாவிஷ்ணுவாய்
தங்கவர்ணி லோபாமுத்திரை மணவாளன்
தபஸிற்கு முன் வந்தார்- சோபனம் சோபனம்!
“ஆதியந்தம் பராசக்திக்கில்லை ஆதாரமுஞ் ஜகத்துக்கிவள் தான் ஜோதிரூபியுடைய ரூபங்களை யெல்லாம் சொல்ல முடியாதொருவராலே ஆனாலும் தெரிந்த மட்டுக்குமிப்போ அவளுடைய சில அவதாரஞ் சொல்வோம்.முன்னே பிரம்மாவின் தியானத்தில் ரக்ஷிக்கமுதல் வந்தாள் ஒரு ரூபம் - சோபனம் சோபனம்!
“கண்டகன் பண்டாஸுரனை வதைக்கவென்றே
காமேசர் அஸ்திரங்கொடுத்தார்
வாங்கிக்கொண்டு அம்மன் காமேசர்
அஸ்திரத்தைமண்டலாகாரமாய்
வில் வளைத்துக்கோடி சூரியன் போன்ற
காமேசர் பாணத்தைக்
கோதண்டத்தில் வைத்து மந்திரித்து
வேடிக்கையாகவே காது பரியந்தம்
விசையாய் இழுத்துவிட்டாள்- சோபனம், சோபனம்.
தேவி பிரயோகித்த அஸ்திரந்தானப்போ
தேவேந்திரன் வஜ்ஜிராயுதம் தடிபோல
தாவிப் பண்டாஸுரன் மார்பிலே பாய்ந்தது
தரணியிலே விழுந்து உயிரைவிட்டான்
அஸ்திரமுடையாளின் அக்கினி ஜ்வாலையாலே
அவனுடபுரங்களும் வெண்ணீராச்சு
அஸ்தமனத்தில் பண்டாஸுரனை வதைத்து
அம்மன் ஜயங்கொண்டாள்- சோபனம் சோபனம்
புஷ்பம் பன்னீர்களைச் சொரியவே தேவர்கள்
புகழ்ந்துஸகிகள் வெண்சாமரம் வீச
அப்பொழுது தேவி சக்திசேனையுடன்
ஆலயத்தை அம்மன் வந்தடைந்தாள்
ஆயுதங்களால் அடிபட்ட சக்திகள்
காயத்தை அம்ருதக் கண்ணால் போக்கினாள்
நோய்கள் போனதுபோல ஸுகம் பெற்றார்
பூமியும் புனிதமாய் செழித்தது –சோபனம் சோபனம்
இந்தச் சோபனம் பாடும் வாழ்வரசிகள் எல்லாம் தேவிகளென்று மனதிலெண்ணி சந்தனத் தாம்பூலம் குங்குமம் பழம் புஷ்பம்
ஸந்தோஷமாய் எல்லார்க்குங் கொடுத்து எந்தெந்தக் கிருஹங்களில் சொல்ல வைத்துக் கேட்பாரோஅந்தந்தக் கிருஹங்களில் அரிஷ்டம் நீங்கும் ஸுந்தரி கிருபையாலே ஸந்ததி விருத்திக்கும் தீர்க்காயுஸுமுண்டு – சோபனம் சோபனம்.
மங்கள வாழ்த்து:-
ஜயமங்களம் லலிதா தேவிக்கும்
ஜயமங்களம் காமேச்வரருக்கும்
ஜயமங்களம் மந்திரிணி தண்ட நாதைக்கும்
ஜயமங்களம் ஸர்வ சக்திகட்கும்
ஜயமங்களம் ஹயக்ரீவருக்கும்
ஜயமங்களம் அகஸ்தியமா முனிக்கும்
ஜயமங்களம் ஸர்வ ஜனங்கட்கும் நமக்கும்
ஜயமங்களம் நித்ய சுப மங்களம்
லலிதாம்பாள் சோபனம் முற்றுப் பெற்றது.
ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment