Thursday 18 September 2014

YEGADESHI SPECIAL NAMES & BENEFITS


ஏகாதசியின் பெயர்களும் பலன்களும்!

வைணவ வழிபாட்டில் ஏகாதசி அன்று மாகவிஷ்ணுவை வழிபடுவதற்கு சிறப்பு பலன்கள் உண்டு என்று சமய நூல்கள் கூறுகின்றன. வருடத்தில் 12 மாதங்களிலும் 24 ஏகாதசிகள் வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும் தனித்தனிப் பெயர்களும், அதற்கான பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள்...

மார்கழி

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். இதற்கு மோட்சதா என்று வேறு ஒரு பெயரும் உண்டு. இறைவன் அனுக்கிரகம் செய்து காட்டும் அத்யயனோத்ஸவம் இந்த நாளில் கொண்டாடப்படும்.

தை

தை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு சபலா என்று பெயர். இது பல மடங்கு பலன் தரவல்லது.

தை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரதா என்று பெயர். இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு பித்ருசாபம் விலகும். நல்ல குழந்தைகள் பிறக்கும்.

அன்றைய தினம் எள் கலந்த நீரில் நீராடித் தலையில் கொஞ்சம் எள்ளைப் போட்டுக் கொண்டு எள்ளால் ஹோமம் செய்து எள்ளையே ஆகாரமாகக் கொண்டு, எள்ளைத் தானம் செய்வது போன்ற காரியங்களை எள்ளினால் செய்வார்கள்.

மாசி

மாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு ஐயா என்று பெயர். இது எல்லாவிதமான பாவங்களையும் நீக்க வல்லது.

பங்குனி

பங்குனி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு விஜயா என்று பெயர். ஸ்ரீராமபிரான் கடலைக் கடக்க இந்த விரதம் அனுஷ்டித்ததாகப் பத்மபுராணம் கூறுகிறது.

பங்குனி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு குமலீக என்று பெயர்.

சித்திரை

சித்திரை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு காமதா என்று பெயர்.இது வேண்டுவோருக்கு வேண்டியதைக் கொடுக்க வல்லது.

வைகாசி

வைகாசி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு வருதீனீ என்று பெயர்.

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு மோகினி என்று பெயர். இந்த வைகாசி தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் புண்ணியமும், பத்ரீதர்சன பலனும் கிடைக்கும்.

ஆனி

ஆனி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா என்று பெயர்.இதை அனுஷ்டிப்பவர்கள் யமலோகம் காணமாட்டார்கள்.

ஆடி

ஆடி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு யோகினி என்று பெயர். இது இலட்ச பிராம்மண போஜன பலனைத் தரவல்லது.

ஆடி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு தேவஜைனீ என்று பெயர். இன்றுதான் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது அரிதுயில் கொள்வதால் இதை “சயனம்” என்றும் சொல்வார்கள்.

ஆவணி

ஆவணி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரா என்று பெயர்.

புரட்டாசி

புரட்டாசி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு அஜா என்று பெயர்.

புரட்டாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு பரிவர்தீனி என்று பெயர்.இதை வாமன ஜயந்தி ஏகாதசி என்றும் சொல்வர். இது சிரவண நட்சத்திரம் கூடியவர்களுக்கு ஏற்றமுடையது.

ஐப்பசி

ஐப்பசி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு இந்திரா என்று பெயர்.

ஐப்பசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு பராங்குசா என்று பெயர்.

கார்த்திகை

கார்த்திகை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு பிரபோதீனி என்று பெயர். இதை உத்தான ஏகாதசி என்றும் சொல்வர். இதைக் கைசிக ஏகாதசி என்றும், துளசி கல்யாண வைபவத்தால் பிருந்தாவன ஏகாதசி என்றும் கூறுவர்.

பலன்கள்

ஏகாதசியன்று பட்டினி இருந்து வைகுண்டவாசனைத் தரிசித்து, விரதமிருப்பவர்களுக்கு இறப்பிற்குப் பின் வைகுண்டம் கிடைக்கும் என்பது வைணவ நம்பிக்கை.மாதமிரண்டு ஏகாதசி வீதம் 24 ஏகாதசிகள் உண்டு. 24 ஏகாதசிகளும் விரதமிருக்க முடியாதவர்கள் பரந்தாமனின் உதயகாலத்தில் வைகுண்ட வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமாவது பட்டினி கிடந்து இரவு கண்விழித்து நாராயணனை பூஜிக்க வேண்டும். அப்படிச் செய்தால் 24 ஏகாதசிகளுக்கான பலன்களும் கிட்டும்

No comments:

Post a Comment