Sunday, 16 June 2013

ஒவ்வொரு நாளும் குரு ஓரை வரும் நாட்கள்!!!

திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை;(ராகு காலத்துக்குள் வருகிறது)
மதியம் 3.00 மணி முதல் 4.00 மணி வரை;
இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை;

செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை;
காலை 12.00 மணி முதல் 1.00 மணி வரை;
இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை;


புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை;
மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை;
இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை;


வியாழக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை;
மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை;(இராகு காலத்தினுள் இருக்கிறது;மதியம் 1.30 முதல் 3 மணி வரை இராகு காலம்!)
இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை;


வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை(இராகுகாலம் 10.30க்குத்  துவங்கி 12 மணிக்கு நிறைவடைகிறது)
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை;
இரவு 12.00 மணி முதல் 1.00 மணி வரை;


சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை;
மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை;
இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை;


ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை;
மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை;
நள்ளிரவு 1.00 மணி முதல் 2.00 மணி வரை;

ஏழு கிழமைகளில் இந்த நேரங்களில் தான் மிகமிகமிக சுப ஓரையான குரு ஓரை வருகிறது;இந்த ஓரை நேரம் ஒரு போதும் மாறாது;ஆனால்,சூரிய உதயத்தைப் பொறுத்து சிறிது நிமிட மாற்றம் இருக்கும்;உதாரணமாக,சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரையிலும் காலை 6.00 மணி என்பதற்குப்பதிலாக 5.45 க்கு சூரிய உதயம் இருக்கிறது;ஐப்பசி முதல் மாசி வரையிலும் சூரிய உதய நேரமானது 6.20 முதல் 6.45 வரை வித்தியாசப்படும்.சூரிய உதயத்திலிருந்து வரும் ஒவ்வொரு மணி நேரமும் ஓரைகள் செயல்படுகின்றன.

திருமணப் பேச்சு ஆரம்பிக்க,தங்கம் வாங்கிட,பணம் முதன் முதலில் சேமிக்க,சேமிக்க ஆரம்பிக்க,கல்வியில் சேர,முதன் முதலில் பள்ளி/கல்லூரியில் சேர,சுய தொழில் துவங்கிட,புதிய ஒப்பந்தம் போட,வங்கி/பரஸ்பரநிதி/பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட,சொல்லித்தர, குருவை சந்திக்க,கோவிலில் பூஜையை ஆரம்பிக்க,கோவிலில் மந்திர ஜபம் செய்ய,வீட்டில் மந்திர ஜபம் செய்ய,வங்கிக்குச் செல்ல,கடன் வாங்கிட,கடன் கேட்க,கணவன் மனைவி பிரச்னையைத் தீர்ப்பதற்கு பேச,நாம் கற்ற தெய்வீகக் கலையை பிறருக்கு போதிக்க,பிறருக்கு மந்திர உபதேசம் செய்ய;பணம்/தங்கம்/ஆன்மீகம்/கோவில்/மந்திரம்/உபதேசம் போன்றவைகள் தொடர்பானவைகளைத் தொடரவும்,ஆரம்பிக்கவும் குரு ஓரை ஏற்றது.

அதிலும் இந்த ஒரு மணி நேரத்தில் முதல் பனிரெண்டு நிமிடம் மிகவும் சக்தி வாய்ந்தது;புனிதம் நிறைந்தது;இந்த நேரத்தில் ஆரம்பிக்கும் எதுவும் சாகசங்களைச் செய்ய வைக்கும்;

அயல்நாடுகளில் வசிப்போர் அவரவர் வாழும் நாடுகளில் இருக்கும் நேரத்திலேயே குரு ஓரையைப் பின்பற்றலாம்.

சில நாட்களில் குரு ஓரையானது ராகு காலம் அல்லது எம கண்ட நேரத்தில் வரும்;அப்போது ஓரைதான் செயல்படும்;ஏன் தெரியுமா?
ஒரு மனிதன் ஒரு செயலை ஆரம்பிக்கும் போது ராகு காலம் அல்லது எம கண்டம் நூறு பங்குதான் இயங்கும்;ஆனால்,ஓரையோ ஆயிரம் பங்கு அளவுக்கு இயங்கும் என்று ஜோதிட அரசு மாத இதழில் ஒரு ஜோதிட கேள்வி பதிலுக்கு பதிலாக தெரிவித்துள்ளனர்.

ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்:இந்த நேரங்களுக்கு அடுத்த ஒரு மணி நேரம் (எல்லா நாட்களிலும்) செவ்வாய் ஓரை வருகிறது;செவ்வாய் ஓரையில் எந்த ஒரு செயல் தொடர்ந்தாலும் அது வாக்குவாதம்,சண்டையில் முடியும்.எனவே,சுப காரியங்கள் துவங்குவோர் மேலே குறிப்பிட்டிருக்கும் ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொள்வது அவசியம்.செவ்வாய் ஓரையில் வீடு,நிலம்.ரியல் எஸ்டேட்,அறுவை சிகிச்சை,மருத்துவம் சார்ந்த விஷயங்களைப் பேசலாம்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment