Thursday, 27 June 2013

போர்ட்டோ ரிக்கோ: சின்னச் சின்ன தீவுகள்… சிலிர்ப்பூட்டும் அனுபவம்!


திகாலை ஐந்து மணிக்கு அலாரம் கூவியது.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க முடியாதா? அடுத்த இரண்டு நாட்கள் ஹெக்டிக்கா இருக்குமே?
பயணம் என்று வந்து விட்ட பிறகு ஷெட்யூல் மெயின்டைன் பண்ணவேண்டியது அவசியமாகிவிடுகிறது. யோசிப்பதில் என்ன பயன்? எழுந்து டீ போடலாம் என்று மெதுவாக நடந்து வந்து கிச்சன் பகுதிக்கு வந்தேன்.
’குவாக் குவாக்‘ என்று வெளியே சத்தம் கேட்டது.. ஒரு நிமிடம் வாரிபோட்டு விட்டது.. என்னவாக இருக்கும் என்று மெதுவாக ஜன்னலை திறந்து பார்த்தால், வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. புல்வெளியில் வாத்து குடும்பம் ஒன்று சுறுசுறுப்பாக இறை தேடி கிளம்பி போய்கிட்டு இருக்காங்க.. அப்பா வாத்து ‘நேரமாகிவிட்டது’ என்று குடும்பத்தாரிடம் கோவிச்சு கத்திகிட்டு போகுதோ.. அட நாம பண்றத வாத்து மேல் பழி போடுறது சரியா?
குடும்பம் மொத்தமும் சொன்ன நேரத்திற்கு முன்னாடியே ரெடியாகி விட்டோமே! இன்னைக்கு நாள் நல்லா இருக்கும் என்ற ‘ஃபீலிங்’ வந்தது.
ஏழு மணிக்கு கிளம்பி, எட்டரைக்கு ஃபெர்ரி டெர்மினல் வந்து விட்டோம். வாரநாள் என்பதலோ என்னவோ கூட்டம் குறைவாக இருந்தது. வண்டியை பார்க் செய்து விட்டு நிதானமாக வந்து ஃபெர்ரியில் ஏறினோம்.
வியக்க வைக்கும் வியேக்கஸ்….

பதினோரு மணிக்கு இசபெல் II போர்ட்டை அடைந்தோம். கரை அருகே வரும்போதே, ஹோட்டல் நம்பருக்கு போன் செய்து விட்டோம். இறங்கி வெளியே வருவதற்கும் ஹோட்டல் பிக்கப் கார் வருவதற்கும் சரியாக இருந்தது.
வந்த இடம் வியேக்கஸ், சென்று கொண்டிருப்பது டபுள்யூ ரீட்ரெட். அட்லாண்டிக்கை ஒட்டி அமைந்துள்ள பீச் ரிசார்ட்ஸ்.
உள்ளே நுழைந்ததுமே ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் குதூகலம் தொற்றிக்கொண்டு விட்டது. ரிசாட்டிற்குள்ளேயே அட்லாண்டிக் கரையோரமாக நமக்காக உருவாக்கப்பட்ட தனி பீச் போல் இருந்தது.. குடும்பம் மொத்தமும் கடலில் கொண்டாடி மகிழ்ந்தோம்.
மற்ற வெளிப்புற அமைப்புகளும், இயற்கையுடன் ஒன்றிணைந்து அருமையான சூழலுடன் இருந்தது. பீச்சின் ஒரு புறம் திருமண ஏற்பாட்டிற்காக அலங்காரம் செய்திருந்தார்கள்.. சாயங்காலம் நடைபெறும் திருமணமாக இருக்கவேண்டும். எட்டு மணிக்கு தயாராக இருக்கவேண்டும். பிக்கப் வேன் வாசலுக்கு வரும் என்று ரிசெப்ஷன் பெண்மணி சொல்லியிருந்தார்.

பகல் முழுவதும் ஆட்டம் பாட்டமாக செல்ல, இரவு அட்வென்சருக்கு தயாரானோம். வேன் வந்தது. இருபது நிமிட பயணத்திற்கு பிறகு ‘எஸ்பெரன்ஸா’ (வியேக்கஸின் தெற்குபக்க கரிபியன் கடலையொட்டிய நகரம்) வில் உள்ள ‘பயோ பே அட்வென்சர்ஸ்’ அலுவலக வாசலில் டிரைவர் இறக்கி விட்டார்.
அன்போடு உபசரித்து வரவேற்றார்கள். பத்து பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின், இன்னொரு வேனில் கடற்கரைக்கு அழைத்து சென்றார்கள். பாதை ஒத்தையடி வண்டித்தடம் தான். இருபுறமும் உரசிய முள் (கருவேலம்) மரங்கள் நம்ம ஊர் கிராமத்தில் எங்கேயோ கண்மாய் பக்கம் போவது போல் இருந்தது.
இறங்கிய பிறகு ரெடியாக இருந்த எலெக்ட்ரிக் போட்டில் ஏறினோம். பதினைந்து நிமிடத்தில் கடலின் நடுவில் நிறுத்தினார்கள். திடீரென்று ஒருவர் ஜம்ப் பண்ணி குதித்தார். அந்த இடமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. என்ன ஏதென்று நினைப்பதற்குள் அடித்த நீச்சலில், அவரை சுற்றிலும் அற்புதமான ஒளிவெள்ளம்.. விவரிக்க இயலாத அனுபவம். விருப்பமானவர்கள் கடலில் இறங்கி நீந்தலாம் என்றார்கள். இப்போதுதான் நண்பர் நீச்சலுக்கு தகுந்தாற்போல் உடையில் செல்லுங்கள் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
இருந்தாலும் பரவாயில்லை என்று குதித்து விட்டேன்.. இரவு கடலில் நீந்துகிறேன். என்னை சுற்றிலும் ஒளிவட்டம். அந்த அனுபவத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. குடும்பமே ஆர்ப்பரிக்க, ஏதோ வித்தை காட்டுபவன் போல் நீந்தி நீந்தி தண்ணீரை கிழித்து ஒளிவெள்ளம் உருவாக்கினேன்.
போர்ட்டோ ரிக்கோ சென்றால் வியேக்கஸ் ‘பயோ பே’ அனுபவத்தை தவற விடாதீர்கள். காயக்கிலும் இதே ‘பயோ பே ட்ரிப்’ இருக்கிறது. சின்னவனுக்கு சரிப்படாது என்று எலெக்ட்ரிக் போட்டிற்கு வ்ந்து விட்டோம். சுற்றுலா வந்த புது இடத்தில், தேவையில்லாமல் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்.

மறுநாளும் ரிசார்ட்ஸின் கடற்கரை அனுபவம்.. இன்னொரு நாள் இருக்கலாம் என்று நினைத்தால், அனைத்து அறைகளும் நிரம்பி விட்டதாக சொல்லிவிட்டார்கள். உண்மையிலேயே, கிளம்ப மனம் இல்லாமல் புறப்பட்டோம். வீடு வந்து சேர இரவு 7 மணியாகிவிட்ட்து.
வழியில் சாப்பிட வேண்டாம் வீட்டுக்கு வந்து விடுங்கள் என்று நண்பன் சொல்லியிருந்ததால் நல்ல பசியுடன் இருந்தாலும் நேராக வந்து விட்டோம். உள்ளூரில் ஃப்ரெஷாக மீன் வாங்கி வருவல் செய்து இரவு டின்னர் ரெடியாக இருந்தது. ஃப்ரெஷ் மீனுக்கு தனி சுவை தான்.. அதுவும் நல்ல பசியில் சாப்பிட்டால் கேட்க வேண்டுமா?
வந்த நாளிலிருந்து தொடர் பயணமாக இருந்ததால், நாளைக்கு ரெஸ்ட் என்று மேலிடத்து உத்தரவு வ்ந்தது.
அடுத்த நாள் முழுவதும் தங்கியிருந்த கால்ஃப் ரிசார்ட் வளாகத்தில் சுற்றி வந்தே பொழுது கழிந்தது. தென்னை மரங்களும், மா மரங்களும் கால்ஃப் கோர்ஸ் தோற்றமே வித்தியாசமாக இருந்தது..
தனமா கேவ் டியூபிங்

மீண்டும் ஒரு அட்வென்சர் பயணம்.. பாதி தூரம் ஃப்ரீவே, மீதி மலைப்பாதை என்று இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு ‘உத்உவாதோ’(Utuado) என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். வழியெங்கும் பச்சைபசேல் மரங்கள். அங்கங்கே ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் மரங்கள். காட்டுப் பகுதியில் தன்னிச்சையாக வளர்ந்துள்ள வாழை மரங்கள். இடையிடையே சில அருவிகளும் இந்த பகுதியின் அழகை இன்னும் கூட்டியது.
ஆரம்பமாயிற்று ‘தனமா கேவ் டியூபிங்’. வழியிலேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டாலும், நண்பன் சொன்னதால் சேஃப்டிக்கு சான்விட்ச்கள் வாங்கி வைத்துக்கொண்டோம்.
முதலில் ‘ட்ரெக்கிங்’. டியூபிங் செல்பவர்களை தவிர ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ் மட்டுமே நடமாட்டம் உள்ள பகுதி. அரை மணி நேர நடைக்கு பிறகு சலசலவென்று ‘தனமா’ ஆற்றின் ஓசை கேட்டது.
கரையோரம் எங்களை காத்திருக்க வைத்து விட்டு, ஆர்கனைசர்கள் ஆற்றை கடந்து சென்றனர்.. ஐந்து நிமிடத்திற்கு பிறகு பெரியதும் சிறியதுமான கார், டிரக் டியுப்களுடன் வந்தனர்.
அடடா, இந்த டியூப்பிலா போகனும் என்று சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. ஒவ்வொருவராக உக்கார வைத்து தண்ணீரில் மிதக்க விட்டபிறகு நன்றாகவே இருந்தது.. சின்னவனை நினைத்தால் எனக்கு பயமாக இருந்தது.
இளங்கன்று பயமறியாது என்பார்களே. அதற்கேற்றாற் போல் சின்ன டியூபில் அம்சமாக இருந்தார் நம்ம சின்னவர்.

லைஃப் ஜாக்கெட்டுடன் எல்லோரும் டியூபில் மிதக்க ஆரம்பித்தோம். ஆர்கனைசர் ஒருவர் முன்னே செல்ல, இருவர் பின் தொடர்ந்தனர். தலையில் டார்ச் லைட்டுடன், சிறிது நேரத்தில் குகைப்பாதைக்குள் நுழைந்தோம். எதைப்பற்றியும் கவலைப்படாமல், தண்ணீர் நிதானமாக சென்று கொண்டிருக்க, எந்த துடுப்பும் இல்லாமல் மிதந்து சென்று கொண்டிருந்தோம்.
அரை மணி நேர மிதப்பு பயணத்திற்கு பிறகு குகைக்கு வெளியே வந்தோம்.. மிகச்சிறந்த அனுபவம்.. குடும்பத் தலைவனாக எனக்குத்தான் டென்ஷன்.. மற்ற மூவரும் ஜாலியாக அனுபவித்து, கேலியும் கிண்டலுமாகத்தான் வந்தார்கள். மோஸ்ட் எஞ்ஜாய்டு வாஸ் சின்னவர்.
கொண்டு வந்திருந்த சான்விட்சை கடித்துக்கொண்டே திரும்பவும் ட்ரெக்கிங்கை தொடர்ந்தோம். வழியில் ஒரு இடத்தில் ‘பேசக்கூடாது’ என்று சொன்னார்கள். பின்னர், ‘பழங்குடி மக்களான தைனோ இந்தியர்களின் முன்னோர்கள் புனிதமாக கருதும் இடம். இன்றும் நாங்கள் நம்பிக்கையுடன் நடந்து கொள்கிறோம்’ என்று விளக்கமளித்தார்கள்.
வரும் போது மாற்று வழியில் வீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாள் பயணத்தில் போர்ட்டோ ரிக்கோவின் சாலைகள் பழக்கமாகி, அன்னியோன்யம் ஏற்பட்டுவிட்டது.
பெல்லி டான்ஸ்
இன்று இரவு வெளியே சாப்பிடுவோம் என்று சொல்லியிருந்தான் நண்பன். அழைத்து சென்ற இடம் ‘பாங்காக் & பாம்பே’. ஆஹா… தாய், இந்தியன் ஃபுட்ஸ் கிடைக்கும் என்று அம்மணிக்கு குஷியாகிவிட்ட்து.

உணவுடன் ஒரு புது விவகாரமும் இருந்தது. போர்டோ ரிக்கன் நடன மங்கை ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்.
நாம் சென்று அமர்ந்த பிறகு அடுத்த பாடலாக ‘கலியோன் கா சாமன்’ என்ற இந்தி பாடலுக்கு இன்னொரு மங்கை நடனமாடி வந்தார்.
‘ஏய், உன் வேலையா இந்த பாட்டு?’
‘இல்லப்பா, நான் முதல் தடவை வரும்போதே இந்த பாட்டு இருந்தது’
என்னதான் நாம் சொல்லிக்கொண்டாலும், இந்தியர்கள் என்றாலே இந்தி என்ற மொழி அடையாளம் தானே உலகத்தினருக்கு தெரிகிறது.
‘நல்ல தமிழ் பாடல் சிடி அவங்களுக்கு கொடுப்பா’..
‘அப்படியே செய்வோம் நண்பா.. ஓனரிடம் சொல்லிடுவோம்’
‘தமிழும் இங்கே ஒலிக்கட்டும்’
‘கண்ணா, நாளைக்கு வேறொரு மலைக்கு போவோமா?’
‘ரிவர் இருக்குமா அங்கிள்’
‘ம்ம் குளிக்கிற மாதிரி வாட்டர் ஃபால்ஸ் இருக்கு, ஆனா ரொம்ப தூரம் நடக்கணும்டா’
‘நான் ரெடி அங்கிள்’
பரவசமூட்டும் எல் ஜுன்கே

காலையிலேயே கிளம்பி நண்பர் சகிதம் எல் ஜுன்கே (El Yunque) ரெயின் ஃபாரஸ்ட் சென்றோம். புதிய உலக அதியசங்கள் பட்டியலில் இடம் பெற தேர்வு செய்யப்பட்ட 28 இடங்களில் இதுவும் ஒன்று.
காரிலேயே செல்லக்கூடிய உச்சி பகுதி வரை சென்று விட்டோம். வழியில் சின்ன சின்ன நீர்வீழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சிலவற்றை தவிர மற்ற நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை.
காரை நிறுத்தி விட்டு பேக் சகிதம் நடக்க ஆரம்பித்தோம். சீராக வடிவமைக்கப்பட்ட ட்ரெயில்ஸ், அங்கங்கே வழிகாட்டி குறியுடன் இருந்தது.
‘இப்படி நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள பாதையில் கூட சிலர் வழி தவறி விடுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?’
“கொஞ்சம் கூட காமன்சென்ஸ் இல்லாதவர்களாகத்தான் இருக்கவேண்டும். அல்லது தொலைந்து போக வேண்டும் என்று திட்டமிட்டு தொலைய வேண்டும்”
“ஒரு சிலர் இரண்டு மூன்று நாட்கள் கழித்து திரும்பியிருக்கிறார்கள். பலர் திரும்பவே இல்லை. ஒன்வே தான், நோ ரிட்டர்ன்”
“எப்படியப்பா?”
“அரிசோனாவில் சொல்வதைப் போல் இங்கேயும் ‘ஏலியன்ஸ்’ இருப்பதாகவும், மனிதர்கள் காணாமல் போவதற்கு அது தான் காரணம் என்று சொல்கிறார்கள்…”

“யப்பா, எதுக்கு வீண் ரிஸ்க்,  ரிட்டர்ன் போயிடலாம்”
“ஏய், நான் ரெண்டு மூணு தடவை வந்திருக்கேன். சும்மா வாங்கப்பா”
மௌண்ட் பிரிட்டன் என்ற உச்சியை தொட்டபோது நடந்து வந்த களைப்பு தெரியவில்லை. மேக கூட்டங்கள் நம்மை கடந்து சென்ற போது ஏற்பட்ட அனுபவம் வேறு எங்கும் கிடைக்காதது.
“இன்னும் இரண்டு ‘உச்சிகள்’ மேலே இருக்கு.. போவோமா?”
“உனக்கே ஓவரா தெரியல்லியா, ஜூனியரை நீ தூக்கி நடக்கிறதென்றால் ரைட்டு”
“சரி சரி, இங்கேயே கொஞ்ச நேரம் இருந்து விட்டு கிளம்புவோம்”
அந்த உயரத்திலும், மலைகளுக்கு மத்தியில் ஒரு பருந்து வட்டமிட்டது. என்னவென்று சொல்வது.. கருடன் நமக்காக வ்ந்ததா? இல்லை இரை தேடி வந்ததா? சப்வே சான்விட்சை முடித்து விட்டு ரிட்டர்ன் ஆனோம்.
எல் ஜுன்கேக்கு , சான் யுவானிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் மலை உச்சியில் ரோட்டின் கடைசி பகுதிக்கு சென்று, அங்கிருந்து மூன்று ‘பீக்குகளுக்கு’ ட்ரெயில்ஸில் நடந்து போக வேண்டும்.
நமக்கு இருக்கும் தெம்பை பொருத்து மவுண்ட் பிரிட்டன், லாஸ் பிக்கசோஸ், எல் ஜுன்கே பீக்குகளுக்கு செல்லலாம். குறைந்த பட்சம் மவுண்ட் பிரிட்டன் வரையாவது சென்று அனுபவிக்க வேண்டிய இடம் எல் ஜுன்கே ரெயின்ஃபாரஸ்ட்.
கபோ ரோஹா வா? கபோ ரோஜோவா? (Cabo Rojo)
“நாளைக்கு ஊருக்கு கிளம்ப வேண்டும். இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான். எங்கே போகலாம்?”
“ஸிப் லைன் அட்வென்சர் அல்லது  கபோ ரோஹோ பீச்?”
“ஸிப் லைன் எங்கே இருக்கிறது”
“எல் ஜுன்கே ரெயின் ஃபாரஸ்டில் ஒன்று, ‘உத்உவாதோ’ பகுதியில் இன்னொன்று பிரபலமானவைகள்”
“ரெண்டு நாட்கள் மலைவாசம் செய்தாகிவிட்டது.. இன்னைக்கு ‘கபோ ரோஹோ’ போலாம்ப்பா”
சுமார் ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு கார் வளைவுப்பாதையில் சென்றது.. வொனிக்கா (Guanica)  நகருக்கு வெளியே, இரு புறமும் மலைகள் சூழ பிரம்மாண்டமான பே, ஏரியல் வியூவில் அட்டகாசமாக இருந்தது .
தொடர்ந்து சென்றால் கடற்கரையை ஒட்டிய சாலை, சிறிது நேரத்தில் பிரைவேட் ரிசார்ட் போல் ஒரு பீச்.
“இதுதான் ‘கபோ ரோஹோ’ வா?”
“இல்லை இது வொனிக்கா(Guanica) வை சார்ந்த ’கானே கோர்டா’ (Cana Corda) பீச்.  நம்ம வழியில் ஒரு ஸ்டாப் ஒவர்.”
“பிரைவேட் ரிசார்ட்டா?”
“இல்லை, வொனிக்கா நகர கட்டுப்பாட்டில் உள்ள பப்ளிக் பீச்”

குடும்பம் குடும்பமாக ஹாமக், பீச் சேர், கிரில் சகிதம் ஆஜராகி உள்ளார்கள்.  இந்த பீச் ஒரு நாள் பிக்னிக்கிற்கு சூப்பர் இடம்.
இங்குள்ள எல்லா கடற்கரையிலும் மரங்களின் நிழல் சிறப்பம்சம். பீச் என்றாலே கொளுத்தும் வெயில் என்ற நம்மூர் நிலை இங்கில்லை.
வெயிலில் சன் பாத் எடுப்பவர்கள் ஒரு பக்கம், ஹாமக் சகிதம் ஓய்வெடுப்பவர்கள், கடலில் குளிப்பவர்கள், கிரில்லில் ஃபுட் என்று இன்னோரு பக்கம் அவரவர்க்கு பிடித்ததை செய்கிறார்கள்.
நம்மூர் கடற்கரையையும் அந்தந்த நகராட்சி, ஊராட்சி சார்பில் தென்னை மற்றும் பிற வகை மரங்கள் வளர்த்து அழகு படுத்தலாம். பராமரிப்பு செலவை ஈடுகட்ட குறைந்தபட்ச கட்டணம் வசூலித்தால் கூட தவறில்லை.
போர்ட்டோ ரிக்கோ தீவின் தென் மேற்கு கார்னர் தான் ‘கபோ ரோஹோ’ (Cab Rojo) மெயின் தீவை ஒட்டியுள்ள குட்டி தீவு, ஆனால் தீவு போல் இல்லாமல். வண்டிப்பாதை அளவிற்கு மெயின் தீவுடன் இணைக்கப்பட்டிருக்கும் பெனின்சுலா என்று சொல்லலாம்.
ஒரு சிறு குன்றின் உயரத்தில் லைட் ஹவுஸ் இருக்கிறது. ஸ்பானியர்களால் கட்டப்பட்டாலும், இன்னும் பராமரிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.. அதன் அருகில் நின்று கடலுக்குள் எட்டிப் பார்த்தால் பிரமிப்பான கிளிஃப்ஸ். கடலுக்கு மத்தியில் இருக்கும் குன்றை இரண்டாக பிளந்து ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கினால் எப்படி இருக்குமோ, அப்படி உள்ளது.
சொந்த படகு வைத்திருப்பவர்கள், கபோ ரோஹோ சிட்டி பகுதியிலிருந்து கடல் வழியாக வந்து கிளிஃப்ஸ்களுக்கு கீழே இருந்து பார்க்கிறார்கள்.
இன்னொரு புறம் பார்த்தால் குலேப்ரா போன்ற ஓயிட் சாண்ட் பீச். அது ஒரு பே போன்ற அமைப்பில் உள்ளது, அலைகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.
இதற்கு அடுத்ததாக இன்னொரு பே (bay), அடுத்தடுத்து இரண்டு ‘பே’ வும் மேலே உயரத்திலிருந்து ஹெலிகாப்டர் வியூ போல் அருமையான இயறகை காட்சிகள். இந்த குன்றின் ஒரு புறம் இயற்கையாகவே சாய்ந்து கீழே இறங்கும் பாதையில் சென்றால் பீச்சுக்கு குறுக்கு வழி இருக்கிறது.
குலேப்ரா செல்ல முடியாதவர்கள் இங்கு வரலாம்..
ஒன்றை மறந்து விட்டேனே.. மெயின் ரோட்டிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் பள்ளமும் மேடான ஒத்தை வண்டி தடம் போல் பாதையில்தான் வரவேண்டும். தனியாக வந்திருந்தால் ரோடு கண்டிஷனை பார்த்து நான் காரை ரிவர்ஸில் திருப்பியிருப்பேன். முதல் தடவை கொஞ்சம் பயங்கரமாகத்தான் தெரிகிறது.
திரும்பும் வழியில் பீச் சைட் ரெஸ்டாரன்டில் நிறுத்தினோம். அழகான கடற்கரை, ஃபைன் டைனிங், ஆனால் விலை அதிகமில்லை.. போர்ட்டோ ரிக்கன் புட்ஸ்  நம் அளவுக்கு ஸ்பைசியாக இல்லையென்றாலும், அதற்கு அடுத்த நிலையில் இருக்கிறது.
கிளாஸ் பாட்டம் போட்
“சரி வீட்டுக்கு போகலாமா?”
“போயிடுவோம், வழியில் ஒரு சின்ன நிறுத்தம் சரியா?”
“சரியான டீடோர்(detour) பார்ட்டியப்பா நீ. ஒரு இடம் என்று சொல்லி ஒன்பது இடத்திற்கு கூட்டிட்டு போறே”
“இல்லை நண்பா, முடிந்த அளவுக்கு வழியில் உள்ள இடத்தை கவர் பண்ணலாம் என்ற நினைப்பு தான்”
“இருட்டி விட்டதே, இனி எங்கே போவது?”
“அந்த கவலை உனக்கெதுக்கு”
‘லா பர்கேரா’ (La Parguera) என்ற இடத்திற்கு வந்தோம். பார்க்கிங் கிடைப்பது சிரமமாக இருந்தது. ஒரு வழியாக நிறுத்தி விட்டு இறங்கி வந்தோம். ‘பயோ பே’ டிக்கெட்  வாங்கி வந்தான் நண்பன்.

“அதான் வியேக்கஸ் பார்த்துட்டோமே. அப்புறம் எதுக்குப்பா இங்கேயும்.”
“வர்ற வழி தானே.. கூட ஒரு மணி நேரம்”
கிளாஸ் பாட்டம் போட்’ என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள். ஆஹா படகு முழுவதும் அடிப்பக்கம் கிளாஸ் என்றால் நல்லா இருக்குமே என்று ஆவலுடன் ஏறினோம். சைடில் நான்கு இடத்தில் கீழே தண்ணீர் தெரிவது போல் அமைத்துள்ளார்கள். சாதாரணமாக ஒன்றும் தெரியவில்லை.
20 நிமிட பயணத்திற்கு பிறகு ஒரு ‘பே’  உள்ளே போட் சென்றது. புரபொஷனல் டைவர்ஸ் இருவர் இருந்தார்கள். உயரத்தில் இருந்து கடலில் குதித்த போது நீர் சிதறல்களும் ஜொலித்தன. கிளாஸ் பாட்டத்திற்கு அடியே சென்று நீந்தி காட்டிய போது, ஒளி வெள்ளம் தெள்ளத்தெளிவாக இருந்தது.
ஆனாலும் வியேக்கஸ் ‘பயோ பே’ அளவிற்கு இதை கம்பேர் பண்ண் முடியாது. வியேக்கஸ் சென்று வருவதற்கு இரண்டு தினங்கள் ஆகிவிடும் என்பதால், அங்கு செல்ல முடியாதவர்கள் ‘லா பர்கேரா’வை தவற விடக்கூடாது.
நம் மங்கையர்களுக்கு சின்ன சின்ன சுவனீருக்கான ஷாப்பிங் கடைகளும் நிறைய இருக்கிறது. இரவில் மக்கள் நடமாட்டத்துடன், ஏதோ திருவிழா கூட்டம் போலிருக்கிறது
“நண்பா, திரும்பி போக மனசில்லைடா.”
“சரி சரி சின்னப்புள்ள மாதிரி அடம் புடிக்காதே, கெளம்பு, செக்யுரிட்டி முடிச்சுட்டு கேட்டுக்கு போகணும், நேரம் ஆகுது”
“என்னங்க, இங்கே வாங்க”
“Delta Airlines le da la bienvenida a bordo del vuelo número 430 DL a Atlanta”
அட்லாண்டா செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமான எண் 430 உங்களை அன்புடன் வரவேற்கிறது!
போர்ட்டோ ரிக்கோ செல்ல விரும்புவர்களுக்கு…
மெரிக்காவின் ஈஸ்ட், சௌத் வெஸ்ட் பெரிய ஏர்போர்ட்களிலிருந்து சான் யுவானுக்கு நேரடி விமானங்கள் இருக்கிறது. முன்னதாக திட்டமிட்டால் சென்று வர கட்டணம் முன்னூறிலிருந்து நானூறு டாலருக்குள் கிடைக்கும்.
வெஸ்ட், நார்த் வெஸ்ட் சிட்டிகளிலிருந்து குறைந்தது ஒரு கனெக்‌ஷன் ஃப்ளைட் வேண்டும். ஐநூறு முதல் எண்ணூறு டாலர்கள் வரை ஆகலாம்.
அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு பாஸ்போர்ட், விசா தேவையில்லை. ஐடி கார்டு / ட்ரைவிங் லைசன்ஸ் மட்டும் இருந்தால் போதும். 50 ஸ்டேட்டுகளுக்கும் செல்வதைப்போல் போர்டோ ரிக்கோவும் சென்று வரலாம்.
சான் யுவானை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால், கார் ரென்டல் கண்டிப்பாக அவசியம்.
ஃப்ளைட், கார், ஹோட்டல் பேக்கேஜ் டீல் கிடைத்தால் நல்லது..
இந்தியாவிலிருந்து வருவதற்கு யு.எஸ் விசிட்டர்ஸ் விசா தேவை. அமெரிக்கன் கன்சுலேட்டில் அப்ளை செய்து பெற வேண்டும்.
www.vayama.com ல் இந்திய நகரங்களிலிருந்து சான் யுவானுக்கு நேரடி டிக்கெட் பதிவு செய்கிறார்கள். 1500 முதல் 1700 யு.எஸ். டாலர் (சுமார் ரூ 75000) வரை இரு வழி டிக்கெட் கட்டணம்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஹரிக்கேன் சீசன் இருப்பதால் பயணத்திற்கு ஏற்ற காலம் இல்லை. வருடத்தில் மற்ற நாட்களில் எப்போதும் செல்லலாம். சில நேரம் மழையால் இடையூறு இருக்கக் கூடும். முன்னரே பதிவு செய்ய வேண்டியிருப்பதால் இதை தவிர்க்க இயலாது.
போர்ட்டோ ரிக்கோவில் குடும்பமாக பார்க்கக் கூடிய இடங்களுக்கு நாங்கள் சென்றோம். தவிர ஹனிமூன் ட்ரிப்புக்காகவும் சில குறிப்பிட்ட இடங்கள், அட்வென்சரிஸ்ட் டிரிப்ஸுக்காகவும் இருக்கின்றன. காயக், ஸ்னார்க்ளிங்க், ஸ்கூபா டைவிங்கிற்கு பல்வேறு இடங்கள் இருக்கிறது. ஸிப் லைன் அட்வென்சர்ஸ்களும் உண்டு.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ‘நைட் லைஃப்’ சான் யுவானில் பிரசித்தம். போர்ட்டோ ரிக்கர்கள் என்றாலே பார்ட்டி லைஃப் தான். வீட்டிலேயே ‘பார்ட்டி ஏரியா’ என்று இருக்கும். பெரிய மியூசிக் சிஸ்டம், பார் என்று பக்காவாக செட் பண்ணியிருக்கிறார்கள்.
நண்பர்கள், குடும்ப உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமணம் மற்றும் அதை அடுத்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அனுபவத்தை நண்பன் சொல்லியிருக்கிறான்.
இன்னொன்று, இந்தியாவைப்பற்றியும் இந்தியர்களை பற்றியும் நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.. நமக்கும், அவர்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக அறிகிறேன். அமேசிங் பீப்பிள்.
Tener un buen viaje a Puerto Rico. Gracias, adios
உங்கள் போர்டோ ரிக்கோ பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள், நன்றி. வணக்கம்.
-    சின்னமணி

No comments:

Post a Comment